இந்தியா

ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியும் தரப்போவதில்லை: சொன்னது யார்?

PTI

இந்தூர்: இன்று ஊடகங்களுக்கு ஒரு தலைப்புச் செய்தியையும் நான் தரப்போவதில்லை என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே  மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இருவருமே கட்சியின் சொத்துகள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேரள மாநிலம் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல், அமேதியில் மீண்டும் போட்டியிடுவது குறித்து பிறகு யோசிக்கலாம், தற்போதைக்கு எனது கவனம் முழுக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில்தான் உள்ளது என்றார்.

ராஜஸ்தானில் நிலவும் போட்டி குறித்து கேட்கப்பட்டதற்கு, இது எனது பயணத்துக்கு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. காங்கிரஸ் கட்சிக்கு இருவருமே சொத்துகள்தான் என்றும் கூறினார்.

மீண்டும் அமேதியில் போட்டியிடுவீர்களா? என்று கேள்வி எழுப்பிய செய்தியாளரைப் பார்த்து, இன்று நான் எந்த ஒரு தலைப்புச் செய்தியும் உங்களுக்குத் தரப்போவதில்லை. எனது முழுக் கவனமும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் மீதே உள்ளது. இந்தக் கேள்வி இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் விவகாரம் என்று கூறினார்.

மேலும், வேலைவாய்ப்பின்மை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்தியாவின் ஒட்டுமொத்த வளமையும், மூன்று அல்லது நான்கு தொழிலதிபர்களின் கைகளில்தான் உள்ளது.  காங்கிரஸ் சிறு தொழில்களை உருவாக்கும் பணியில் கவனம் செலுத்தி, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT