பஞ்சாபில் ரயில் விபத்தில் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம், கர்தார்பூரில் நேற்று ரயில் விபத்தில் மூன்று குழந்தைகள் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல் அதிகாரி ஜக்ஜித் சிங் கூறுகையில், "ரயில் விபத்தில் 3 குழந்தைகள் இறந்தனர்.
ஒருவர் படுகாயம் அடைந்தார். இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். நான்காவது ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் மரங்களில் உள்ள பழங்களை சாப்பிடுவதற்காக இங்கு வந்துள்ளனர்.
இதையும் படிக்க- தெலங்கானாவில் சாக்லெட் சாப்பிட்ட 8 வயது சிறுவன் தொண்டையில் சிக்கி பலி
அப்போது ரயில் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை என்றார். ரயில் விபத்தில் மூன்று குழந்தைகள் பலியான சம்பவம் கர்தார்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.