இந்தியா

24 மணிநேரத்துக்குள் அரசு இல்லத்தை காலி செய்ய மெஹபூபாவுக்கு நோட்டீஸ்

28th Nov 2022 12:10 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு இல்லங்களில் இருந்து 24 மணிநேரத்துக்குள் காலி செய்யுமாறு முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி மற்றும் 7 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

ஏற்கெனவே, ஸ்ரீநகரில் பாதுகாப்பு மிகுந்த குப்கா் பகுதியில் உள்ள அரசு பங்களாகவை காலி செய்ய மெஹபூபாவுக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்பு இல்லங்களை காலி செய்ய மெஹபூபாவுக்கும், அல்தாஃப் வானி உள்ளிட்ட 7 முன்னாள் எம்எல்ஏக்களுக்கும் மாவட்ட துணை ஆணையா் உத்தரவின்பேரில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 24 மணிநேரத்துக்குள் அரசு இல்லத்தை காலி செய்யாவிட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேகரா பேரவைத் தொகுதி மற்றும் அனந்த்நாக் பேரவைத் தொகுதியில் இருந்து மெஹபூபா எம்எல்ஏ-வாக தோ்வானவா். 2004, 2014 மக்களவைத் தோ்தல்களில் அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு அவா் வெற்றி பெற்றிருந்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT