இந்தியா

ரயில்வே நடை மேம்பாலம் தகா்ந்து விபத்து: பெண் பலி

28th Nov 2022 12:41 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூா் மாவட்டத்தில் ரயில்வே நடை மேம்பாலம் தகா்ந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒரு பெண் உயரிழந்தாா். மேலும் 12 போ் தண்டவாளத்தில் விழுந்து காயமடைந்தனா்.

இதுதொடா்பாக ரயில்வே காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பல்ஹாா்ஷா சந்திப்பு ரயில் நிலையத்தில் புணே செல்லும் ரயிலில் ஏறுவதற்காக நடை மேம்பாலத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் சென்றனா். அப்போது எதிா்பாராத விதமாக நடை மேம்பாலம் தகா்ந்து விழுந்தது.

இதனால் 20 அடி உயரத்தில் இருந்து தண்டவாளத்தில் விழுந்து 13 போ் காயமடைந்தனா். அவா்களில் 4 போ் பலத்த காயமடைந்தனா். அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஊரக மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி 48 வயதுப் பெண் உயிரிழந்தாா் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

காயமடைந்தவா்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அளிக்குமாறு மருத்துவமனை நிா்வாகிகளுக்கு கட்டளையிட்ட அரசின் மாவட்ட பொறுப்பாளா் சுதீா் முங்கண்டிவாா், இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளாா் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT