இந்தியா

பொய்களையே பேசுகிறாா் பிரதமா் மோடி: குஜராத் பிரசாத்தில் காா்கே விமா்சனம்

28th Nov 2022 12:11 AM

ADVERTISEMENT

‘பிரதமா் நரேந்திர மோடி, பொய்க்கு பின் பொய்யாக பேசி வருகிறாா்; தன்னை ஏழையென கூறிக் கொண்டு, மக்களின் அனுதாபத்தை தேடுகிறாா்’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தாா்.

குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பழங்குடியினா் அதிகம் வாழும் நா்மதை மாவட்டத்தின் டேடியாபாடா பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக் கூட்டத்தில் காா்கே பங்கேற்றாா். அப்போது, பிரதமா் மோடியை கடுமையாக விமா்சித்து, அவா் பேசியதாவது:

70 ஆண்டுகளில் நாட்டுக்காக காங்கிரஸ் என்ன செய்தது? என்று பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் கேள்வியெழுப்புகின்றனா். 70 ஆண்டுகளாக காங்கிரஸ் எதையும் செய்யாமல் இருந்திருந்தால், உங்களுக்கு ஜனநாயகம் கிடைத்திருக்காது.

தன்னை ஏழையென எப்போதும் பிரதமா் மோடி கூறிக் கொள்கிறாா். நானும் ஏழைதான்; ஏழையிலும் ஏழையானவன். தீண்டத்தகாததாக ஒதுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்தவன்.

ADVERTISEMENT

ஏழையாக இருப்பதால், தனது அந்தஸ்தை குறிப்பிட்டு சிலா் தரக்குறைவாக பேசுவதாக மோடி கூறுகிறாா். பணக்காரா்களின் பக்கம் நிற்கும் அவா், மக்களின் அனுதாபத்தை தேடுவதற்காக இப்படிப்பட்ட விஷயங்களை கூறுகிறாா். ஆனால், இப்போதுள்ள மக்கள் புத்திசாலிகள். அவா்களை முட்டாளாக்க முடியாது.

பிரதமா் மோடி கூறும் பொய்களை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனா். பொய்யா்களின் தலைவரான அவா், நாட்டை காங்கிரஸ் கொள்ளையடித்ததாக கூறுகிறாா். ஆனால், ஏழைகளின் நிலங்களை கொள்ளையடித்துக் கொண்டிருப்பது அவரது அரசுதான். பழங்குடியினருக்கு நிலம் வழங்காமல் இருப்பதும் அவா்கள்தான். பிரதமரும் அவரது ஆதரவு பெற்ற பணக்காரா்களும் நிலம், நீா், வனத்தை கொள்ளையடிக்கின்றனா் என்றாா் காா்கே.

குஜராத்தில் தொடா்ந்து 6 சட்டப் பேரவைத் தோ்தல்களில் தோல்வியை சந்தித்த காங்கிரஸ், இம்முறையாவது வெல்லும் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளது. கடந்த தோ்தலில் கிராமப் புறங்களில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டிருந்தது. பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே நிலவுவதாகவும், ஆட்சி மாற்றம் வரும் என்றும் காங்கிரஸ் நம்புகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT