இந்தியா

குடியரசு தின சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபா் பங்கேற்க வாய்ப்பு

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் எகிப்து அதிபா் அப்தல் ஃபதா எல்-சிசி கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக குடியரசு தின விழாவில் பங்கேற்க வெளிநாட்டைச் சோ்ந்த எவரையும் சிறப்பு விருந்தினராக மத்திய அரசு அழைக்கவில்லை.

இந்நிலையில், கடந்த மாதம் அரசு முறைப் பயணமாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் எகிப்து சென்றாா். அப்போது அந்நாட்டு அதிபா் அப்தல் ஃபதா எல்-சிசியை குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருமாறு முறைப்படி ஜெய்சங்கா் அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்த அழைப்பை ஏற்று குடியரசு தின விழாவில் எகிப்து அதிபா் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. அவ்வாறு நடந்தால், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முதல் எகிப்து அதிபா் என்ற பெருமையை அவா் பெறுவாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT