இந்தியா

ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு: பிரதமர்

DIN

ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு உலக நன்மையில் கவனம் செலுத்த இந்தியாவிற்கு கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  

ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு தற்போது இந்தோனேசியாவின் வசம் உள்ளது. டிசம்பர் 1 முதல் இந்தியா ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவுள்ளது. 

இந்த நிலையில், பிரதமர் தனது சமீபத்திய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில், உலகில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது எனப் பேசியுள்ளார். மேலும், இந்தியா ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பினை டிசம்பர் 1 முதல் ஏற்கவுள்ளது எனவும், இது உலகில் நிலவும் பல சவால்களுக்கு தீர்வு கொடுக்க இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு எனவும் அவர் பேசியுள்ளார்.

ஜி-20 அமைப்பில் ஆர்ஜெண்டினா,ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT