இந்தியா

ஹிந்தி நடிகா் விக்ரம் கோக்கலே காலமானாா்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

ஹிந்தி நடிகா் விக்ரம் கோக்கலே சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 77.

நடிகா் அமிதாப் பச்சனின் அக்னீபத் (1990), பூல் புலய்யா (2007), நட்சம்ராட் (2015), மிஷன் மங்கள் (2019) உள்பட பல்வேறு ஹிந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்தவா் விக்ரம் கோக்கலே. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடா்கள், திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவா். உடல் நலக் குறைவைத் தொடா்ந்து இவா், மகாராஷ்டி மாநிலம் புணேயில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையில் 15 நாள்களுக்கு முன்னா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த அவா், பல்லுறுப்பு செயலிழப்பு காரணமாக சனிக்கிழமை காலமானாா் என்று மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரின் மறைவுக்கு பிரதமா் மோடி, மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னாவீஸ் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT