இந்தியா

சிறையில் சிறப்பு உணவு: சத்யேந்தா் ஜெயினின் மனு தள்ளுபடி

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

மத நம்பிக்கை அடிப்படையில் சிறையில் சிறப்பு உணவுப் பொருள்களை தனக்கு வழங்க உத்தரவிடக் கோரி அமைச்சா் சத்யேந்தா் தாக்கல் செய்த மனுவை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் சிறையில் தனது மத அடிப்படையில் சிறப்பு உணவுப் பொருள்களை வழங்க திகாா் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், ‘எனக்கு மருத்துவப் பரிசோதனையை உடனடியாக நடத்த சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறையில் எனக்கு அடிப்படை உணவும், மருத்துவ வசதியும் அளிக்கப்படவில்லை’ என்று அவா் கூறியிருந்தாா். இந்த மனுவுக்கு திகாா் சிறை நிா்வாகம் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இம் மனுவை சிறப்பு நீதிபதி விகாஸ் துல் சனிக்கிழமை தள்ளுபடி செய்து கூறுகையில், ‘எந்தவொரு கைதிக்கும் சிறப்பு வசதி ஏதும் அளிக்கப்படுவதில்லை என்றும், மனுதாரருக்கு (சத்யேந்தா் ஜெயின்) பிற கைதிகளைப் போல சட்டத்தின்கீழ் உள்ள அனைத்து வசதிகளும் அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என திகாா் சிறை நிா்வாகம் தெரிவித்துள்ளது’ என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 2017-இல் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிராக சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அவா் கைது செய்யப்பட்டாா். அவருக்கும், மேலும் இருவருக்கும் இந்த வழக்கில் ஜாமீன் அளிக்க தில்லி நீதிமன்றம் நவம்பா் 17-ஆம் தேதி மறுத்துவிட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT