இந்தியா

ஆன்டிபயாடிக் மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதை தவிர்க்க வேண்டுமா? ஐசிஎம்ஆர் விளக்கம்!

DIN

புதுதில்லி: சமீபகாலமாக, உலகம் வரலாறு காணாத புதிய புதிய நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படும் நிலையில், இளைஞர்கள் கூட மாத்திரைகள் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளை உட்கொள்ளும் அளவுக்கு உலகம் பல தொற்றுநோய்களால் சிக்கியுள்ள நிலையில், அச்சுறுத்தும் நுண்ணுயிர் எதிர்ப்பு மாத்திரைகளை (ஆன்டிபயாடிக்) பரிந்துரைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைக்கும் போது எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.  வைரஸ் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் குறைந்த தர காய்ச்சல் போன்ற நிலைமைகளுரக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைப்பதற்கு எதிரான வழிகாட்டுதல்களை எச்சரித்துள்ளது, அதே நேரத்தில் அவற்றை பரிந்துரைக்கும் போது​​ மருத்துவர்கள் ஒரு காலக்கெடுவைப் பின்பற்றுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, தோல் மற்றும் மென்மையான திசு நோய்த்தொற்றுகளுக்கு ஐந்து நாள்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், நிமோனியாவுக்கு ஐந்து நாள்களுக்கும், மருத்துவமனையில் ஏற்பட்ட நிமோனியாவுக்கு எட்டு நாள்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பொதுவாக, கடுமையான செப்சிஸ், செப்டிக் ஷாக், நிமோனியா, வென்டிலேட்டருடன் தொடர்புடைய நிமோனியா மற்றும் நெக்ரோடைசிங் ஃபாசிடிஸ் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே ஆன்டிபயாடிக் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. 

எனவே, அவற்றை புத்திசாலித்தனமாகத் தொடங்குவது மற்றும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். அதாவது கடுமையான பாதிப்புகளுக்கு மட்டுமே அனுபவ அடிப்படையில் ஆன்டிபயாடிக் சிகிச்சை அளிக்க முடியுமா அல்லது குறைக்க முடியுமா என்பதை மதிப்பீடு செய்து, சிகிச்சையின் காலம் குறித்து ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும்.

"ஒரு மருத்துவ நோயறிதல் பெரும்பாலும் ஒரு மருத்துவ நோய்க்குறியீட்டில் பொருந்தக்கூடிய நோய்க்கிருமிகளைக் கணிக்க உதவுகிறது. இது காய்ச்சல், புரோகால்சிட்டோனின் அளவுகள், ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைகள், பாக்டீரியா வளர்ச்சி அல்லது கதிரியக்கவியல் ஆகியவற்றைக் கண்மூடித்தனமாகச் நம்பி நோய்த்தொற்றைக் கண்டறிவதைக் காட்டிலும், சரியான ஆன்டிபயாடிக் மருந்து ஏற்புடையதாக இருக்கும்" என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

ஜனவரி 1 மற்றும் டிசம்பர் 31, 2021-க்கு இடையில் நடத்தப்பட்ட ஐசிஎம்ஆர் கணக்கெடுப்பு, நிமோனியா மற்றும் செப்டிசீமியா போன்றவற்றின் சிகிச்சைக்காக முக்கியமாக ஐசியூ அமைப்புகளில் நிர்வகிக்கப்படும் கார்பபெனெம் என்ற சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் பயன்படுத்துவதால், இந்தியாவில் ஒரு பெரிய பகுதி நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் உருவாக்கி உள்ளதால், இனி பயன் தராது என்று பரிந்துரைத்தது. 

தரவுகளின் பகுப்பாய்வின்படி, மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளின் தொடர்ச்சியான அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது, இதன் விளைவாக சில நோய்த்தொற்றுகளுக்கு கிடைக்கக்கூடிய மருந்துகளைக் கொண்டு சிகிச்சையளிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

பாக்டீரியம் க்ளெப்சியெல்லா நிமோனியா சில நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு உணர்திறன் குறைவதைக் காட்டியது, 2016 இல் 65 சதவீதமாகவும்,  2020 இல் 45 சதவீதமாகவும், பின்னர் 2021 இல் 43 சதவீதமாகவும, மருந்துகளுக்கு பாக்டீரியா உணர்திறன் குறையும் போக்கை மேலும் நிரூபித்துள்ளது. இமிபெனெம் எதிர்ப்பு 2016 இல் 14 சதவீதமாகவும், 2021 இல் 36 சதவீதமாகவும் அதிகரித்தது, மேலும் இது ஈ கோலி பாக்டீரியத்தால் வரும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு ரத்தம், நுரையீரல் (நிமோனியா) அல்லது உடலின் மற்ற பாகங்களில் தொற்றுகளை ஏற்படுத்தும் மற்றொரு பாக்டீரியாவான சூடோமோனாஸ் ஏருகினோசாவில், கடந்த சில ஆண்டுகளில் அனைத்து முக்கிய ஆன்டிப்சூடோமோனல் மருந்துகளுக்கும் எளிதில் பாதிக்கப்படுவதில் சீரான அதிகரிப்பு உள்ளது.

தரவுகளின் பகுப்பாய்வு, சி. பாராப்சிலோசிஸ் மற்றும் சி. கிளாப்ராட்டா போன்ற பல பூஞ்சை நோய்க்கிருமிகள் பொதுவாகக் கிடைக்கும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்பை அதிகரித்து வருகின்றன. தற்போது சந்தையில் உள்ள மருந்துகளுடன் சில நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பது சவாலானது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் தீவிரமான கண்காணிப்பு தேவைப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT