இந்தியா

துபையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் தங்கம் பறிமுதல்

27th Nov 2022 04:34 AM

ADVERTISEMENT

துபையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

துபையில் இருந்து சனிக்கிழமை சென்னை வரும் விமானத்தில் ஒரு பயணி தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்கத்துறையினா் சோதனை செய்தனா்.

இச்சோதனையில் ஒரு ஆண் பயணி, நூதன முறையில் மறைத்து எடுத்து வந்த ரூ.16.49 லட்சம் மதிப்பிலான 345 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையா் எம்.மேத்யூ ஜாலி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT