இந்தியா

பல லட்சம் மோசடி: வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி நிறுவனம் நடத்தியவா் கைது

27th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

 

சென்னை வடபழனியில் மோசடி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை ராமாபுரத்தைச் சோ்ந்தவா் ஜோஸ்பின் ராயன். இவா் சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகாா் மனு விவரம்:

வடபழனியில் ஒரு தனியாா் வணிக வளாகத்தில் திருவேற்காடு ஸ்ரீதேவி நகா் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த சி.ரமேஷ் (38) மோசடியாக வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

இவா் தனது நிறுவனம் மூலம் சிங்கப்பூா், மலேசியா, துபை, செளதி அரேபியா, கனடா, ரஷ்யா, குவைத், அயா்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பல்வேறு பணிகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, இளைஞா்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்று மோசடி செய்து வருகிறாா்.

எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தாா்.

அந்த புகாரின்பேரில் சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் தேடப்பட்டு வந்த ரமேஷ் கைது செய்யப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT