இந்தியா

பெண்கள் எப்போது அழகு? பாபா ராம்தேவ்வின் சர்ச்சை பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

26th Nov 2022 08:51 PM

ADVERTISEMENT

பெண்கள் ஆடை தொடர்பாக பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. 

பிரபல யோகா ஆசிரியராக அறியப்படுபவர் பாபா ராம்தேவ். இவர் அவ்வப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் சர்ச்சையாவது வழக்கம். இந்நிலையில் பெண்களின் ஆடை மற்றும் அழகு தொடர்பாக சமீபத்தில் அவர் தெரிவித்த கருத்துக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

இதையும் படிக்க | 50 கோடி வாட்ஸ்ஆப் தரவுகள் விற்பனை: பயனர்கள் அதிர்ச்சி

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பேசிய அவர், “பெண்கள் சேலைகளிலும், சல்வாரிலும் அழகாக இருப்பதைப் போன்றே ஆடை அணியாதபோதும் அழகாக இருப்பார்கள்”எனத் தெரிவித்தார். பெண்களின் ஆடை தொடர்பாக பேசுவதாகக் கூறி அவர் தெரிவித்த இந்த கருத்து பெண்களின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | அஜித்தின் துணிவு படத்தில் பாடல் பாடிய நடிகை மஞ்சு வாரியர் 

இதுதொடர்பாக விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. தில்லி பெண்கள் பாதுகாப்பு ஆணையர் சுவாதி மலிவால் இந்த விடியோவைப் பகிர்ந்து கண்டனங்கள் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

 

பாபா ராம்தேவ் இத்தகைய சர்ச்சைக் கருத்து தெரிவிக்கும்போது மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸின் மனைவி அமுதா பட்னவீஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் சிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் சிண்டே ஆகியோரும் மேடையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT