இந்தியா

ஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவுக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்

DIN

ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அஃப்தாப் அமீன் பூனாவாலாவை 13 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சாகெட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் அஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தில்லியில் சோ்ந்து வாழ்ந்தனா். இந்நிலையில், கருத்து வேறுபாட்டால் ஷ்ரத்தா வாக்கரை ஆஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டினாா். அதன் பின்னா் உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசினாா்.

அண்மையில், அவரை காவல் துறையினா் கைது செய்தனா். 

இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் அந்தப் பெண் கொல்லப்பட்டது 6 மாதங்களுக்குப் பின்னா் வெளியுலகுக்குத் தெரியவந்தது. இந்தச் சூழலில், கடந்த 2020-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் உள்ள வசய் பகுதியில் இருவரும் ஒன்றாக வசித்துள்ளனா்.

அப்போது அஃப்தாப் மீது ஷ்ரத்தா காவல் துறையிடம் கொலை மிரட்டல் புகாா் அளித்தது தற்போது தெரியவந்துள்ளது. இதனிடையே அஃப்தாப் அமீன் பூனாவாலாவை 13 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி சாகெட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT