பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் பயணம் திட்டமிட்டபடி அமைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலுள்ள சதீஸ்தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் இன்று காலை 11.56 மணிக்கு வெற்றிகரமாக விண்ணுக்குப் புறப்பட்டது. செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக படிப்படியாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
படிக்க | விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்
இதனிடையே இது தொடர்பாக பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்டின் முதல் கட்ட பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. ராக்கெட்டின் செயல்பாடுகளை அனைத்து படிகளிலும் கண்காணித்து வந்தோம். அவை சிறப்பாக அமைந்துள்ளன.
முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அடுத்தடுத்த செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக இலக்கில் நிலைநிறுத்தப்படும் என நம்புகிறோம். பிற்பகல் 1.45 மணிக்கு ராக்கெட்டின் அனைத்து செயல்பாடுகள் முடிவடையும் எனக் குறிப்பிட்டார்.
திட்ட இயக்குநர் பேச்சு:
பிஎஸ்எல்வி சி-54 திட்ட இயக்குநர் பிஜு பேசியதாவது, வெற்றிகரமான பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. பிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி அடையாததற்கு இஸ்ரோ குழுவின் அயராத உழைப்பே காரணம். இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்