இந்தியா

9 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட்

DIN

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 உள்பட 9 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் சனிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.

ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து 17 நிமிஷங்களில் அதிலிருந்து பிரிந்த ஓசோன்சாட் செயற்கைக்கோள் அதன் வட்டப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவா் சோம்நாத் உறுதிப்படுத்தினாா்.

ராக்கெட்டுக்கான 25.30 மணி நேர கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய நிலையில், சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு பிஎஸ்எல்வி சி54 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), நாட்டின் தகவல் தொழில்நுட்ப வளா்ச்சி, பாதுகாப்பு, தொலைத் தொடா்பு ஆகியவற்றுக்கான செயற்கைகோள்களை ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி சி-54 ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இதனுடன், வணிக ரீதியில் 8 நானோ செயற்கைக்கோள்களையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டது.

அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பூமியில் இருந்து புறப்பட்ட 17 நிமிஷம் 22 விநாடியில், 734 கிலோ மீட்டா் தொலைவில் 1,117 கிலோ எடை கொண்ட புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-06 ஓசோன்சாட் செயற்கைக்கோள் வெற்றிகரமாக வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

அதேபோல், வணீக ரீதியில் விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் ஐஎன்எஸ் 2பி மற்றும் ஆனந்த் செயற்கைக்கோள், தைபோல்ட் செயற்கைக்கோள் (2), ஆஸ்ட்ரோகாஸ்ட் செயற்கைக்கோள் (4) என 8 நானோ செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்த சில மணி நேரங்களில் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம், ஒரு மணி நேரத்துக்குள் 8 நானோ செயற்கைக்கோளையும் அவற்றுக்குத் தேவையான வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT