இந்தியா

மும்பை தாக்குதல் தினம்: மகாராஷ்டிர ஆளுநர், முதல்வர் அஞ்சலி!

26th Nov 2022 10:50 AM

ADVERTISEMENT

மும்பை தாக்குதல் தினத்தையொட்டி மகாராஷ்டிர அரசு சார்பில் ஆளுநர், முதல்வர், அதிகாரிகள்  ஆகியோர் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி தாஜ் ஓட்டல், சத்ரபஜி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட மும்பையின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா்.  இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகிறது. 

மும்பை தாக்குதல் தினத்தையொட்டி மகாராஷ்டிர அரசு சார்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ADVERTISEMENT

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் என பலர் தாஜ் ஹோட்டல் முன்புள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT