இந்தியா

ஒற்றுமை நடைப்பயணத்தில், கால் இடறி விழுந்தார் திக்விஜய் சிங்: மூண்டது வார்த்தைப்போர்

26th Nov 2022 04:01 PM

ADVERTISEMENT


ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கால் தவறி விழுந்தார். நல்வாய்ப்பாக காயம் எதுவும் ஏற்படவில்லை.

சனிக்கிழமை கார்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற நடைப்பயணத்தில் பங்கேற்றிருந்த திக்விஜய் சிங், தேநீர் இடைவேளையின்போது, சாலையோரம் இருந்த உணவகத்தை நோக்கிச் சென்றபோது கால் இடறி விழுந்தார். உடனடியாக அவருடன் இருந்த அனைவரும் துரிதமாக செயல்பட்டு அவரை தூக்கிவிட்டனர். நல்வாய்ப்பாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

இதையும் படிக்க.. உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்திகை பார்த்தாரா அஃப்தாப்? அதிகாரிகள் தகவல்

இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையி, மத்தியப் பிரதேசத்தில் திக் விஜய் சிங் கால் இடறி கீழே விழுந்தார், காரணம், மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் மோசமான சாலைகள்தான் என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌஹான், சில காலத்துக்கு முன்பு, இந்த மாநில சாலைகள் அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்டன் நகரச் சாலைகளை விட சிறப்பாக இருப்பதாகக் கூறியதை சுட்டிக்காட்டிய ஜெய்ராம் ரமேஷ், மத்தியப் பிரதேசத்தில் சாலைகள் மோசமாக இருப்பதால் நானே மூன்று முறை தடுக்கிவிழப்போனேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க.. ராகுலின் படத்தைத் தலைகீழாக பதிவிட்டு.. 'இப்போ சரியாக உள்ளது' என்ற ஸ்மிருதி இராணி

இதற்கு பாஜக தலைவர் நரேந்திர சலுஜா தனது டிவிட்டர் பக்கத்தில், திக் விஜய் சிங் காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளிவிட்டதால்தான் விழந்தாரே தவிர, மோசமான சாலையால் அல்ல என்பது விடியோவைப் பார்த்தாலே தெரிகிறது என்று பதிவிட்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT