இந்தியா

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்! கட்டிவைத்து அடித்த மக்கள்!

26th Nov 2022 11:10 AM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தில் பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட இளைஞரை கிராம மக்கள் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக காவல் துறை சார்பில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு பகுதியில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை கிராம மக்கள் இன்று கையும் களவுமாக பிடித்தனர். 

ADVERTISEMENT

படிக்க திகார் சிறையில் தில்லி அமைச்சர்: மேலும் சில விடியோக்கள் வெளியாகி அதிர்ச்சி!

பள்ளி மாணவிகளை தவறான கண்ணோட்டத்தில் தொடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் தெருவில் அந்த இளைஞரை கட்டி வைத்து அடித்தனர். 

பின்னர் சக்கராயபாட்னா காவல் துறையிடம் இளைஞரை கிராம மக்கள் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

படிக்கசபரிமலைக்கு தமிழகத்திலிருந்து சிறப்பு ரயில்கள், பேருந்துகள்!

அவர், ஆசிரியர்களை வீட்டிலிருந்து அழைத்துச்சென்று பள்ளியில் விடுபவர் என காவல் துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT