புது தில்லி; தில்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலிலிருந்து, மருத்துவமனை தகவல்களை மீட்க முடியாமல் இரண்டாவது நாளாக அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களின் சிகிச்சை தகவல்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கில் நீடிக்கிறது.
இதையும் படிக்க.. உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒத்திகை பார்த்தாரா அஃப்தாப்? அதிகாரிகள் தகவல்
சர்வரின் பாதுகாப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வர் மீது நடத்தப்பட்ட சர்வர் தாக்குதலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் தகவல்கள் பதியப்பட்ட கணினி மற்றும் பேக்அப் சர்வர்கள் அனைத்திலிருந்தும் தகவல்கள் சுத்தமாக துடைத்து எடுக்கப்பட்டுள்ளன.
தகவல்களை திருடிய கும்பலிடமிருந்து, பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், தகவல்களை திரும்பப் பெறுவது குறித்தும் மின்னஞ்சல் வாயிலாக எய்ம்ஸ் மருத்துவமனையை தொடர்புகொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க.. ராகுலின் படத்தைத் தலைகீழாக பதிவிட்டு.. 'இப்போ சரியாக உள்ளது' என்ற ஸ்மிருதி இராணி
விரைவில் அனைத்துத் தகவல்களையும் பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. தற்போதைக்கு அனைத்து விதமான அவசர, வழக்கமான சிகிச்சை, மருத்துவ பரிசோதனை நிலையங்களின் தகவல்கள் அனைத்தும் மனிதர்களாலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும், பாதுகாப்புக் குறைபாட்டுக்குக் காரணமான இரண்டு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், பல்வேறு பிரிவுகளின் கீழ், சர்வரை ஹேக் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
புதன்கிழமை காலை 6.45 மணிக்கு எய்ம்ஸ் சர்வரில் ஊடுருவிய ஹேக்கர்கள், தகவல்கள் அனைத்தையும் திருடியுள்ளனர். இதனால், புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகள் பதிவு முதல், பரிசோதனை முடிவுகள், ஆன்லைனில் நோயாளிகளுடன் சந்திப்பு உள்பட அனைத்துமே முடங்கிப்போனதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.