இந்தியா

அரவிந்த் கேஜரிவாலுக்கு அரசியல் கண்புரை : பாஜக

26th Nov 2022 04:24 PM

ADVERTISEMENT

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அரசியல் கண்புரையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாஜக தாக்கிப் பேசியுள்ளது.

தனது அரசின் மீதான உற்பத்தி வரி ஊழல் மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டதில் செய்த ஊழல் ஆகியவற்றை மறைத்து தனக்குத் தானே நேர்மையானவர் என்ற சான்றிதழை அரவிந்த் கேஜரிவால் அளித்துக் கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பிஎஸ்எல்வி சி-54 வெற்றி! திட்டமிட்டபடி செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்: சோம்நாத்

இது குறித்து பாஜகவைச் சேந்த செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நாடு முழுவதுக்கும் அரவிந்த் கேஜரிவால் ஒரு நேர்மையற்றவர் என்பது தெரிந்துவிட்டது. சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் இல்லாதது நாங்கள் நேர்மையானவர்கள் என்பதற்கு சான்று எனப் பேசியுள்ளார். அதேபோல பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக தலைவர்கள் யாராவது நேர்மையானவர்கள் எனக் கூறிக் கொள்ள முடியுமா என்று கேட்கிறார். அவர் அரசியல் கண்புரையால் பாதிக்கப்பட்டுள்ளார். தில்லி உற்த்தி வரி ஊழல் மற்றும் பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டதில் செய்த ஊழல் அவருக்குத் தெரியவில்லை. சிபிஐ 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது  என்றார்.  

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT