'அமேசான் அகாதெமி'யைத் தொடர்ந்து உணவு விநியோக சேவையை நிறுத்த முடிவு அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் பொருளாதார சூழ்நிலையை சீர்செய்யும் பொருட்டு மெட்டா, ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் அமேசான் நிறுவனம், உயர்கல்வி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் 'அமேசான் அகாதெமி' யை மூட முடிவு செய்துள்ளதாக நேற்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து உணவு டெலிவரி சேவையை நிறுத்தவும் அமேசான் முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் சோதனையில் உள்ள உணவு விநியோக சேவையை டிசம்பர் 29 முதல் நிறுத்துவதாக அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருடாந்திர செயல்பாட்டு திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிக்க | 'அமேசான் அகாதெமி' மூடப்படுவதாக அறிவிப்பு! மாணவர்களுக்கு கட்டணம் திருப்பியளிப்பு