இந்தியா

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு

25th Nov 2022 05:49 PM

ADVERTISEMENT

 

மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றி மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

வழக்கை கர்நாடக காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், 2 நாள்களுக்கு முன்பு வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் என்ஐஏவுக்கு கர்நாடக காவல் துறை அனுப்பியது. 

கர்நாடக மாநிலம் மங்களூரில் சனிக்கிழமை ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் இருந்த பயணி மற்றும் ஓட்டுநர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என்று கர்நாடக மாநில காவல்துறை அறிவித்தது.

ADVERTISEMENT

படிக்கபாலின மாற்றம் குற்றமா? 3ஆம் பாலினத்தவர் திருமணத்துக்குத் தடை விதித்த கோயில்!

மங்களூா் குக்கா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவா் கா்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம், தீா்த்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீக் (24) என்பது தெரியவந்தது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் முக்கிய குற்றவாளியாக அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த விசாரணையை கர்நாடக காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் தற்போது மாற்றி உத்தரவிட்டுள்ளது. 

இதனால் கடந்த இரு நாள்களுக்கு முன்பே வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் என்ஐஏ அமைப்பிடம் கர்நாடக காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

படிக்க மெஸ்ஸியின் ஆட்டம் பார்க்க 'லீவ் லெட்டர்' கொடுத்த பள்ளி மாணவர்கள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT