இந்தியா

மெட்டா, ட்விட்டர், கூகுள் வரிசையில் 6 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எச்பி முடிவு!

25th Nov 2022 09:49 AM

ADVERTISEMENTபுதுதில்லி: மெட்டா, ட்விட்டர், கூகுள், அமேசான் நிறுவனங்களின் வரிசையில், அடுத்ததாக எச்பி நிறுவனமும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரித்து வரும், உவலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்பி 6 ஆயிரம் ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.  இது அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 12 சதவீதம் ஆகும். தற்போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

மேலும், அதன் நடப்பு முழு ஆண்டுக்கான நிதி அறிக்கையில், 4 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் பேரை 2025 நிதியாண்டுக்குள்ளாக பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று காலங்களில் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரித்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. விற்பனை சரிவு மட்டுமின்றி, பணிவீக்கம் உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவையே நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT