இந்தியா

தில்லியில் ஆம் ஆத்மி நிர்வாகி தூக்கிட்டுத் தற்கொலை: கேஜரிவால் இரங்கல்

25th Nov 2022 10:22 AM

ADVERTISEMENT

ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சந்தீப் பரத்வாஜ், தில்லியில்  ரஜோரி கார்டன் இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ஆம் ஆத்மி கட்சியின் வர்த்தகப் பிரிவுச் செயலாளர் சந்தீப் பரத்வாஜ், தில்லியில் உள்ள ரஜோரி கார்டன் இல்லத்தில் வியாழக்கிழமை இறந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

நேற்று(வியாழக்கிழமை) மாலை 4.40 மணிக்கு ஒரு போன் அழைப்பு வந்ததாகவும் சந்தீப் பரத்வாஜ் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதாகவும் தகவல் வந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர், அவர் இறந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினர். 

சந்தீப் பரத்வாஜின் மறைவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT