இந்தியா

ராஜிநாமா செய்கிறாா் செளமியா சுவாமிநாதன்

25th Nov 2022 05:47 AM

ADVERTISEMENT

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டா் செளமியா சுவாமிநாதன் வரும் நவம்பா் 30-ஆம் தேதி அந்தப்பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்ய உள்ளாா்.

மீண்டும் ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இந்தியாவைச் சோ்ந்த குழந்தைகள் நலமருத்துவரான செளமியா சுவாமிநாதன், கடந்த 2019-ஆம் மாா்ச் மாதம் உலக சுகாதார அமைப்பின் முதலாவது தலைமை விஞ்ஞானியாக நியமிக்கப்பட்டாா்.

மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சித் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் மிக்க இவா், காசநோய், ஹெச்ஐவி உள்ளிட்ட நோய்கள் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிகளால் உலகப் புகழ் பெற்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, இவா் மருத்துவ ஆராய்ச்சிக்கான மத்திய அரசின் செயலாளராகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநராகவும் (2015 முதல் 2017 வரை) பதவி வகித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT