இந்தியா

பிஸ்லெரி நிறுவனத்தை ரூ.7000 கோடிக்கு வாங்கும் டாடா குழுமம்

DIN

டாடா நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லெரி நிறுவனத்தை ரூ.6,000 - ரூ.7,000 கோடிக்கு வாங்கவிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியாக ரமேஷ் சௌஹான் உள்ளார். இந்த நிறுவனத்தை அடுத்தக்கட்ட விரிவாக்கத்துக்குக் கொண்டு செல்ல ரமேஷ் சௌஹானுக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால், இந்த நிறுவனத்தை விற்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, சௌஹான், குளிர்பான விற்பனையிலும் ஈடுபட்டு வந்தார். தம்ஸ் அப், லிம்கா, கோல்டு ஸ்பாட் உள்ளிட்ட குளிர்பானங்களையும் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது பிஸ்லெரி - டாடா குழுமத்துக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பிஸ்லெரி நிர்வாகத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சௌஹானே நிர்வகிப்பார் என்று தெரிய வந்துள்ளது. ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சௌஹான் கூறுகையில், டாடா குழுமும், தற்போதிருக்கும் நிலையை விட பிஸ்லெரியை மேலும் சிறப்பாகக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனினும், பிஸ்லெரியை விற்பனை செய்வது என்ற முடிவு மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. டாடா குழுமத்தின் கலாசாரம், மரியாதை, அடிப்படை விஷயங்களை மதிப்பது உள்ளிட்டவைதான், பிஸ்லெரியை பலரும் வாங்க முன் வந்தாலும், இவர்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்ததற்குக் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, டாடா குழுமும், ஹிமாலயன் பெயரில் பாக்கெட் செய்யப்பட்ட மினரல் குடிநீர்களை டாடா காப்பர் பிளஸ் மற்றும் டாடா க்ளுகோபிளஸ் என்ற பெயர்களில் விற்பனை செய்து வருகிறது. தற்போது பிஸ்லெரியை டாடா குழுமம் வாங்கிவிட்டால், இந்தத் துறையில் முன்னணி நிறுவனமான டாடா குழுமம் மாறிவிடும் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

SCROLL FOR NEXT