சித்தாந்த மற்றும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி நண்பர்களுடன் இணக்கமாக இருப்பவர் ராகுல் காந்தி என சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கூறியுள்ளார்.
ஒற்றுமை நடைப்பயணத்திற்கு இடையிலும் ராகுல் காந்தி நேற்று என்னை சந்தித்துப் பேசினார். எங்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளதாகவும் மீண்டும் இணைந்து செயல்படுவோம் என்றும் ராகுல் கூறினார்.
சித்தாந்த மற்றும் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி நண்பர்களுடன் இணக்கமாக இருப்பவர் ராகுல் காந்தி. பாஜகவிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். ஆனால், நான் சிறையில் இருந்தபோது அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஏனெனில் இது முகலாய கால அரசியல் என்று கூறினார்.
இரு தினங்களுக்கு முன்னதாக சாவா்க்கா் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு சஞ்சய் ரௌத் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மாநில காங்கிரஸ் தலைவர்களே ராகுல் காந்தியை ஆதரிப்பதில்லை! சஞ்சய் ரெளத்