இந்தியா

ஷ்ரத்தா கொலை: கொலையாளியிடம் உண்மை கண்டறியும் சோதனை!

21st Nov 2022 10:32 AM

ADVERTISEMENT

 

தில்லியில் இளம் பெண் ஷ்ரத்தாவை கொலை செய்து 35 துண்டாக வெட்டி வீசிய ஆப்தாப்பிடம் திங்கள்கிழமை உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை சேர்ந்த ஷ்ரத்தா எனும் இளம்பெண் 6 மாதங்களுக்கு முன்பு தில்லியில் உள்ள மொஹாலி குடியிருப்பில் 35 துண்டுகளாக காதலரால் வெட்டப்பட்டு தில்லியின் பல்வேறு பகுதிகளில் வீசப்பட்டது.

இந்த சம்பவம் இப்போது வெளிச்சத்திற்கு வர சமீப நாள்களாக போலீசார் ஷ்ரத்தா உடலின் எச்சங்களை, அவரது காதலன் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் தேடி வருகின்றனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க | எச்சரிக்கை... இந்தியாவில் குழந்தைகளை தாக்கும் உயர் ரத்த அழுத்த நோய் நகர்ப்புறங்களில் அதிகம்! 

இதனிடையே திங்கள்கிழமை தில்லி காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில், மொஹராலி காட்டு பகுதியில் இருந்து மண்டை ஓட்டின் அடிப்பகுதி, தலை துண்டிக்கப்பட்ட தாடை பகுதி, வெட்டப்பட்ட எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. 

ஆனால், அவை ஷ்ரத்தா எலும்புகள் தானா? என உறுதி படுத்த, ஷ்ரத்தாவின் தந்தை மரபணு மாதிரியுடன் கண்டறியப்பட்ட எலும்புகளின் டிஎன்ஏ ஒத்து போகிறதா? என கண்டறிய டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொலையாளி ஆப்தாப்பிடம் திங்கள்கிழமை உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

ஷ்ரத்தா கொலை வழக்கில் அடிக்கடி வாக்குமூலத்தை மாற்றி கூறும் ஆப்தாபிடம் சோதனை நடத்த தில்லி சகோத் மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து ஆப்தாபிடம் தில்லி ரோகிணி பகுதியில் உள்ள டாக்டர் பாபா சகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற உள்ளது.

சோதனையின் போது தடயவியல் குழு நேரில் இருக்க வேண்டியது கட்டாயம் என்பதால், தடயவியல் நிபுணர் குழுவிடம் தில்லி போலீசார் வருகைக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.   

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT