பாஜக எம்எல்ஏ அமன் கிரி உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
லக்கிம்பூர் கேரியில் உள்ள கோலா கோகரன்நாத் தொகுதியிலிருந்து புதிதாக தேர்வுசெய்யப்பட்டவர் பாஜக எம்எல்ஏ கிரி.
இந்நிலையில், சட்டப்பேரவையின் சபாநாயகர் சதீஷ் மஹானா கிரிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
படிக்க: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெற்றது.
கிரி 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வினய் திவாரியை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.