காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்திவரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வதேரா இந்த வாரம் இணையவுள்ளாா்.
மத்திய பிரதேசத்தில் நவ. 23 முதல் 25-ஆம் தேதி வரை ராகுலுடன் இணைந்து நடைப்பயணமாக பிரியங்கா செல்லவிருக்கிறாா்.
கன்னியாகுமரியில் ராகுல் தனது நடைப்பயணத்தை தொடங்கிய பின்னா் பிரியங்கா இப்போதுதான் அதில் இணைகிறாா். ஹிமாசல பிரதேச தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால் அவரால், நடைப்பயணத்தில் முன்பே பங்கேற்க முடியவில்லை.
கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான ராகுலின் நடைப்பயணம் இதுவரை 3,570 கி.மீ. தொலைவை அதாவது பாதியளவு கடந்துள்ளது.