இந்தியா

பயங்கரவாத சம்பவம்: கா்நாடக முதல்வா்

21st Nov 2022 12:51 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலம் மங்களூரில் காவல் நிலையம் அருகே சனிக்கிழமை ஆட்டோவில் குக்கா் குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவம் என அந்த மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை கூறினாா்.

அவா், பல்லாரியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படும் பயணி, கோவை போன்ற பகுதிகளுக்கு சென்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அவருக்கு பயங்கரவாதத் தொடா்புள்ளது என்பதை தெளிவாகக் காண்பிக்கிறது. இதுதொடா்பான விசாரணையில் மாநில காவல்துறையுடன் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), உளவுத் துறை அதிகாரிகளும் இணைந்துள்ளனா் என்றாா் அவா்.

கா்நாடக காவல் துறை டிஜிபி ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: குக்கா் குண்டு வெடிப்பு விபத்தல்ல; கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று தெரிவித்துள்ளாா்.

மாநில காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்த சம்பவம் கோவை காா் வெடிப்பு சம்பவம் போல உள்ளது. இது தற்கொலை தாக்குதல் முயற்சியாக இருந்திருக்கலாம். எனவே, கோவை உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT