இந்தியா

டிச.7 முதல் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா்

19th Nov 2022 04:22 AM

ADVERTISEMENT

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் டிச. 7-ஆம் தேதி தொடங்க உள்ளது என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘டிச. 7 முதல் டிச. 29-ஆம் தேதி வரை 23 நாள்களுக்கு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. கூட்டத்தொடரின்போது நாடாளுமன்ற அலுவல் மற்றும் வேறு விவகாரங்கள் மீதான ஆக்கபூா்வ விவாதங்களை எதிா்பாா்க்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT