இந்தியா

ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி தனியார் ஊழியரிடம் 40 லட்சம் மோசடி செய்த பெண்!

19th Nov 2022 01:24 PM

ADVERTISEMENT

 

கர்நாடகத்தின், விஜயபுரா மாவட்டத்தில் ஐஏஎஸ் அதிகாரி என்றும், திருமணம் செய்துகொள்வதாகவும் ரூ.40 லட்சத்துக்கும் அதிகமான பண மோசடியில் பெண் ஒருவர் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 

தனியார் நிறுவன ஊழியர் பரமேஷ்வர் ஹிப்பராகி. இவருக்கு ஹாசனைச் சேர்ந்த மஞ்சுளா என்பவர் முகநூலில் நண்பராக ஏற்றுக்கொள்ள ரிக்வெஸ்ட் அனுப்பியிருந்தார். அவரும் ரிக்வெஸ்டை ஏற்றுக்கொண்டுள்ளார். பின்னர் இருவரும் தொடர்ந்து சாட் செய்ய ஆரம்பித்துள்ளனர். 

ADVERTISEMENT

சில நாள்களுக்குப் பிறகு மஞ்சுளா, தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி சிகிச்சைக்காக ரூ.700 பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார். அவரும் அனுப்பியுள்ளார். 

பின்னர், தனது தாயாரின் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது தாயார் இறந்துவிட்டதாகவும் அவரை அடக்கம் செய்வதற்கும் அவ்வப்போது பணம் கேட்டுப் பெற்றுள்ளார்.

படிக்க: இரட்டை இலையின்றி சொந்த ஊரில்கூட இபிஎஸ் வெல்ல முடியாது: தினகரன்

அதன்பின்னர், சில நாள்கள் கழித்து யுபிஎஸ்சி தேர்வில் தான் வெற்றிபெற்று ஐஏஎஸ் அதிகாரியாகி விட்டதாகவும், தனக்கு மாவட்ட ஆணையர் பணி வழங்கப்பட்டதாகவும், அந்த பொறுப்பைப் பெற பெங்களூரு செல்வதாகவும் மஞ்சுளா அவரிடம் கூறினார். பரமேஷ்வரை திருமணம் செய்துகொள்வதாகவும் நம்பிக்கையளித்துள்ளார். 

மஞ்சுளா கூறுவதை ஒவ்வொரு முறையும் நம்பியுள்ளார் பரமேஷ்வர். பின்னர், ஒரே முறையில் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளித்து ஆயிரக்கணக்கில் பணப் பரிமாற்ற செய்யத் தொடங்கியுள்ளார் மஞ்சுளா. 

சிறுக சீறுகவென ரூ.41,26,800 வரை பணம் பெற்று மோசடியில் ஈடுப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்து ஹிப்பராகி, சைபர் போலீசில் புகார் அளித்தார். 

இதையடுத்து, குற்றவாளியான மஞ்சுளாவை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சைபர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT