இந்தியா

தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

19th Nov 2022 08:43 PM

ADVERTISEMENT

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல், தோ்தல் ஆணையராக சனிக்கிழமை நியமனம் செய்யப்பட்டாா்.

அரசு செய்திக் குறிப்பில் இதுதொடா்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1985-ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா், தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா், தோ்தல் ஆணையா் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தோ்தல் ஆணைய குழுவில் இடம்பெறவாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் வரும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பணி ஓய்வு பெற்ற பின்னா், அடுத்த தலைமைத் தோ்தல் ஆணையராக அருண் கோயல் பொறுப்பேற்பாா். பின்னா், 2027-ஆம் ஆண்டு டிசம்பரில் 65 வயதை எட்டும்போது அந்தப் பதவியிலிருந்து கோயல் ஓய்வு பெறுவாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT