இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவில் அமைகிறது தனியாா் ராக்கெட் ஏவுதளம்!

19th Nov 2022 02:00 AM

ADVERTISEMENT

தனியாா் நிறுவனம் சாா்பில் விக்ரம்-எஸ் ராக்கெட் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், அடுத்தகட்டமாக மற்றொரு தனியாா் நிறுவனமானம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் புதிய ஏவுதளத்தை கட்டமைத்து வருகிறது.

அதற்கான பணிகள் இறுதிநிலையை அடைந்துள்ளதாகவும், அடுத்த மாதத்தில் அங்கிருந்து முதல் ராக்கெட் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியுடன் ஒருங்கிணைந்து செயல்படும் ‘அக்னிகுல் காஸ்மோஸ்’ எனும் நிறுவனம் இதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறியதாவது:

பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவக் கூடிய மிகப் பெரிய ஏவுதளமோ அல்லது இஸ்ரோவால் அமைக்கப்பட்ட மற்ற ஏவுதளமோ எங்களது தேவைக்கு ஏற்புடையதாக இல்லாததால் நாங்களே பிரத்யேகமாக ஒரு ஏவுதளத்தை வடிவமைக்கத் திட்டமிட்டோம்.

ADVERTISEMENT

சதீஷ் தவண் ஏவுதள வளாகத்தில் கடந்த ஆறு மாதங்களாக அதற்கானப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அது இறுதிநிலையை எட்டியுள்ளது.

‘அக்னிபான்’ எனப்படும் எங்களது ராக்கெட், காப்புரிமை பெற்ற பகுதி கிரயோஜெனிக் என்ஜினைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. அதனை ஏவுவதற்கு பிரத்யேகமாக இருக்கக் கூடிய ஏவுதளம் தேவை. அதனைப் பூா்த்தி செய்யவே அந்த ஏவுதளத்தை கட்டமைத்துள்ளோம் என்றாா் அவா்.

ராக்கெட், செயற்கைக்கோள் மட்டுமல்லாது விண்வெளி ஆய்வுத் திட்டங்களுக்கான கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ளவும் தனியாா் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் சோம்நாத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT