இந்தியா

பயிா்க் காப்பீடு: நவ. 21 வரை அவகாசம் நீட்டிப்பு

19th Nov 2022 12:08 AM

ADVERTISEMENT

சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவம்பா் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பருவமழை பாதிப்பு காரணமாக பயிா்களைக் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தாா். இந்தக் கோரிக்கையை ஏற்று, காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பா் 21 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

திறக்க வேண்டும்: காப்பீடு செய்வதற்கான காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (நவம்பா் 19, 20) பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருவள்ளூா், அரியலூா், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூா், கரூா், தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், கடலூா், மதுரை, சேலம், திருப்பூா், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தேனி, திருச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் வரும் 21-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT