இந்தியா

எஃகு மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றது மத்திய அரசு

19th Nov 2022 11:15 PM

ADVERTISEMENT

எஃகு மீதான ஏற்றுமதி வரியை சனிக்கிழமை முதல் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது எஃகு தொழில் துறையை மேம்படுத்தவும், எஃகு ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘58% இரும்பு உள்ளடக்கத்துக்கு குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாது துகள்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் & செமி கோக் மற்றும் ஃபெரோனிகல் மீதான இறக்குமதி வரிச் சலுகைகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

58 சதவீதத்துக்கும் அதிகமான இரும்பு உள்ளடக்கம் கொண்ட இரும்புத் தாது கட்டிகள் ஏற்றுமதிக்கு 30% குறைந்த ஏற்றுமதி வரி விதிக்கப்படும்.

இரும்புத் தாது துகள்களின் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படாது. ஆந்த்ராசைட்/பிசிஐ & கோக்கிங் நிலக்கரி, ஃபெரோனிகல் ஆகியவற்றுக்கு 2.5% இறக்குமதி வரி விதிக்கப்படும். கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு 5% இறக்குமதி வரி விதிக்கப்படும். இதன்மூலம் 2022, மே 22-க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT