இந்தியா

பிகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது: 2 தொழிலாளர்கள் பலி

18th Nov 2022 09:23 PM

ADVERTISEMENT

பிகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். 

பிகார் மாநிலம், நாளந்தாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இன்று திடீரென இடிந்தது. இந்த சம்பவத்தில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இதையும் படிக்க- ராகுலுடன் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்! வரலாற்று நிகழ்வு!!

நிகழ்விடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண் குமார், "பாலத்தின் மேல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

ADVERTISEMENT

எத்தனை பேர் இடிபாடுகளில் புதைந்துள்ளனர் என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை" என்றார். இதனிடையே அதிகாரிகளின் அலட்சியத்தால் இச்சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT