பயங்கரவாதத்தை விடப் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது மிகவும் ஆபத்தானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித்ஷா மேலும் கூறுகையில்,
பயங்கரவாதிகள் தொடர்ந்து வன்முறையை நடத்துவதற்கும், இளைஞர்களை தீவிர மயமாக்குவதற்கும், நிதி ஆதாரங்களை உயர்த்துவதற்கும் புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருவதாகவும், தீவிரவாதத்தைப் பரப்பவும் தங்கள் அடையாளங்களை மறைக்கவும் டார்க்நெட் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
பயங்கரவாதம், உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தலாகும்.
படிக்க: தப்பித்தாரா உதயநிதி? கலகத் தலைவன் - திரைவிமர்சனம்
ஆனால், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பது பயங்கரவாதத்தை விட மிகவும் ஆபத்தானது என்று நான் நம்புகிறேன். ஏனெனில் பயங்கரவாதத்தின் வழிகள் மற்றும் முறைகள் அத்தகைய நிதியிலிருந்து வளர்க்கப்படுகின்றன.
மேலும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பது உலக நாடுகளில் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துகிறது. பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் எந்த மதம், தேசியம் அல்லது குழுவுடன் இணைக்கப்படக்கூடாது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் மீதான மறைமுகத் தாக்குதலில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த தடுக்கும் நாடுகளும் உள்ளன என்றார் அவர்.