இந்தியா

ரயில்வேயில் 35,000 காலியிடங்களுக்கு மார்ச் 2023க்குள் பணிநியமன ஆணை: ரயில்வே அதிகாரி தகவல்  

18th Nov 2022 10:23 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: ரயில்வேயில்  35,000 காலியிடங்களுக்கு தேர்வான விண்ணப்பதாரர்களுக்கான பணி நியமன ஆணை , 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் வழங்கப்படும்  என்று ரயில்வே அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்திய ரயில்வேயின் செயல் இயக்குநர் (தகவல் மற்றும் விளம்பரம்) அமிதாப் சர்மா கூறியதாவது:

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள  35,281  காலியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு செயல்முறை வரும் மார்ச் 2023க்குள் நிறைவடையும், இந்த நியமனங்கள் அனைத்தும் சிஇஎன் (மத்திய வேலைவாய்ப்பு அறிவிப்பு) 2019 இன் அடிப்படையில் நடைபெறும்" என்று அமிதாப் சர்மா கூறினார்.

ADVERTISEMENT

ஒரே நேரத்தில் அனைத்து நிலைகளிலான தேர்வு முடிவுகளை வெளியிடாதது குறித்து கேள்விக்கு, ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுவதால், ஒரே விண்ணப்பதாரர் பல்வேறு பதவிகளுக்கு தகுதி பெறுகின்றனர். இதனால் தகுதியுடைய பலர் விண்ணப்பத்தாரர்கள் வேலைவாய்ப்பை இழக்கின்றனர். எனவே அனைத்து நிலைகளின் தேர்வுகளின் முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவதில்லை.

இதையும் படிக்க | டிஆர்டிஓ-ல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: எங்கு, எப்போது, எப்படி விண்ணப்பது?

மேலும், "ரயில்வேயின் அனைத்து நிலைகளின் தேர்வு முடிவுகளை தனித்தனியாகப் பெற ரயில்வே தயாராகி வருகிறது, இதனால் அதிக ரயில்வே ஆர்வலர்கள் வேலை பெறுவதற்கான வாய்ப்பைப் பெற முடியும்" என்று சர்மா கூறினார்.

கரோனா தொற்று இருந்தபோதிலும், ரயில்வே தேர்வுகள் மற்றும் முடிவுகளுக்கு தயாராகி, குறுகிய காலத்தில் விரைந்து செயல்பட்டு முடிக்கப்பட்டு வருகிறது. "மார்ச் 2023க்குள், ரயில்வேயில் 35,000 காலியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு செயல்முறையை நிறைவடையும்," என்று சர்மா கூறினார். 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT