இந்தியா

சென்னை நோக்கி வந்த நவஜீவன் ரயிலில் தீ விபத்து: பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்!

18th Nov 2022 09:20 AM

ADVERTISEMENT

 

அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் ஆந்திரம் அருகே திடீரென தீ விபத்துக்குள்ளானது. அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நவஜீவன் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு ஆந்திரம் மாநிலம் கூடூர் அருகே வந்துகொண்டிருந்த போது  ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரயிலில் பயணம் செய்து பயணிகளிடையே பதற்றம் நிலவியது.  உடனடியாக ரயில்வே அதிகாரிகள் கூடூர் சந்திப்பில் ரயிலை நிறுத்தி, தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர்.

இதையும் படிக்க | ராஜஸ்தான்: ரயில் தண்டவாள குண்டுவெடிப்பில் 4 போ் கைது

ADVERTISEMENT

நவஜீவன் விரைவு ரயில் கூடூர் ரயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது.

அதிகாரிகள் கவனத்துடன் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
 

ADVERTISEMENT
ADVERTISEMENT