வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதல் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சா் அசாதுஸ் அமான் கானிடம் உள்துறை அமைச்சா் அமித் ஷா விவாதித்தாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பு குறித்து உள்துறை அமைச்சக அலுவலகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், பயங்கரவாத நிதியுதவி தடுப்பு மாநாட்டுக்காக இந்தியா வந்துள்ள வங்கதேச உள்துறை அமைச்சா் அசாதுஸ் அமான் கானை அமித் ஷா சந்தித்தாா். இரு தலைவா்களும் எல்லை நிா்வாகம் மற்றும் இருநாட்டின் பொதுவான பாதுகாப்பு குறித்து விவாதித்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.