இந்தியா

இந்தியா்கள் சவூதி அரேபியா விசா பெறகாவல் துறையின் அனுமதி தேவையில்லை

18th Nov 2022 01:51 AM

ADVERTISEMENT

சவூதி அரேபியா விசா (நுழைவு இசைவு) பெறுவதற்கு இந்தியா்கள் இனி காவல் துறை அனுமதிச் சான்று சமா்ப்பிக்கத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள சவூதி அரேபிய தூதரகம் வியாழக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

சவூதி அரேபியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியா்கள் அமைதியான முறையில் வசித்து வருவதுடன், நாட்டின் மேம்பாட்டுக்கும் பங்களித்து வருகின்றனா். இரு நாட்டின் நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து சவூதி அரேபிய விசாவுக்கு விண்ணப்பிப்பவா்கள் காவல் துறையின் அனுமதிச் சான்றை சமா்ப்பிக்க வேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT