இந்தியா

மத்திய அரசின் நிதியைப் பெற பிரதமரின் பாதங்களைத் தொட வேண்டுமா? மம்தா பானர்ஜி ஆவேசம்

15th Nov 2022 09:26 PM

ADVERTISEMENT

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) மூலம் மாநில அரசின் நிலுவைத் தொகையைப் பெற பிரதமர் நரேந்திர மோடியின் கால்களைத் தொட வேண்டுமா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்துக்கான மத்திய அரசின் நிதியை பெறுவது நமது உரிமை. இந்த விவகாரத்தில் பிரதமரை நேரில் சந்தித்து பேசினேன். இப்போது அவருடைய பாதங்களைத் தொட வேண்டுமா என்று மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசியுள்ளார்.

இன்று பிற்பகல் ஜார்கிராமில் நடந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் விழாவில் முதல்வர் மம்தா உரையாற்றினார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சில தலைவர்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிடுவதால், மாநில அரசுக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதி தடைபடுகிறது என்று முதல்வர் மம்தா கூறினார்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், எம்ஜிஎன்ஆர்இஜிஏ தவிர, மத்திய அரசின் வீட்டு வசதி திட்டங்களுக்கான நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை.

இதையும் படிக்க: காங்கிரஸ் அலுவலகத்தில் மோதல்: காவலர்கள் குவிப்பு

நிதிப் பற்றாக்குறையால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடு கட்டும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் மம்தா கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT