இந்தியா

நடிகர் கிருஷ்ணா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்! 

15th Nov 2022 12:42 PM

ADVERTISEMENT

 

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

தெலுங்கு சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்ட நடிகர் கிருஷ்ணா, மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

இவரின் மறைவைத் தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், திரைத்துறை துறையினர், ரசிகர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

படிக்க: பலாத்கார குற்றவாளிகள் பகிரங்கமாகத் தூக்கிலிட வேண்டும்: ம.பி. அமைச்சர்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

கிருஷ்ணாகாரு பழம்பெரும் சூப்பர் ஸ்டார். இவர் தன்னுடைய நடிப்பு மற்றும் கலகலப்பான பேச்சு மூலம் எண்ணற்ற மக்களின் இதயங்களை வென்றவர். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்யவியலாத இழப்பாகும் என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

80 வயதான மூத்த நடிகர் கிருஷ்ணா,  ஐதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இறந்தார், அங்கு அவர் மாரடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT