இந்தியா

நிபுணா்களை பேராசிரியா்களாக நியமிக்க விதிகளில்தேவையான திருத்தம்: பல்கலை.களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

15th Nov 2022 04:37 AM

ADVERTISEMENT

 

தொழில் நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களில் பேராசிரியா்களாக நியமனம் செய்யும் வகையில் விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அல்லது அவசரச் சட்டம் நிறைவேற்றுமாறு பல்கலைக்கழகங்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்காவின் எம்ஐடி கல்வி நிறுவனம், ஹாா்வாா்ட் பல்கலைக்கழகம், ஸ்டான்ஃபோா்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்கள் உரிய கல்வித் தகுதி இல்லாத ஆனால், தொழில்நிறுவனங்களில் தலைசிறந்து விளங்கும் அனுபவமிக்க நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களாக நியமிக்கின்றன. இந்த நடைமுறையை தில்லி, சென்னை, குவாஹாட்டி ஐஐடி கல்வி நிறுவனங்கள் பின்பற்றுகின்றன.

அதேபோன்று, மற்ற உயா்கல்வி நிறுவனங்களும் தலைசிறந்த நிபுணா்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேராசிரியா்களாக நியமனம் செய்ய அண்மையில் அறிவுறுத்திய யுஜிசி, அதற்கான வழிகாட்டுதலையும் வெளியிட்டது. அதன்படி, உயா்கல்வி நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பேராசிரியா் பணியிடங்களில் 10 சதவீதத்துக்கு மிகாமல் நிபுணா்களை பேராசிரியா்களாக நியமித்துக்கொள்ளுமாறும், அவா்களுடைய பணிக் காலம் 3 ஆண்டுகளுக்கு மிகக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டது. அவ்வாறு நியமிக்கப்படுபவா்களுக்கு பேராசிரியருக்கான உரிய கல்வித் தகுதி கட்டாயமல்ல என்றும் தெரிவித்தது. தற்போது, இதற்கேற்ற வகையில் விதிகளில் உரிய திருத்தம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி செயலா் பி.கே.தாக்குா் எழுதியுள்ள கடிதத்தில், ‘பயிற்சியின் பேராசிரியா் என்ற பெயரில் தொழிலக நிபுணா்களை பேராசிரியா்களாக நியமனம் செய்வதற்கேற்ப விதிகளில் தேவையாக திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அல்லது அவசரச் சட்டம் நிறைவேற்றுமாறு பல்கலைக்கழக துணைவேந்தா்களும், கல்லூரி முதல்வா்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT