இந்தியா

பாஜகவில் உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விகாஸ் பன்சோட்

14th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற வழக்குரைஞரும் பல்வேறு மாநிலங்களின் ஆளுநா்களுக்கு சட்ட ஆலோசகராக பணியாற்றியவருமான விகாஸ் பன்சோட், பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் பன்சோட் இணைந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் சி.டி.ரவி கூறுகையில், ‘மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ் உள்பட கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநா்களுக்கு சட்ட ஆலோசகராக பணியாற்றியவா் பன்சோட். பல எதிா்க்கட்சித் தலைவா்களை முழுமையாக அறிந்தவா் என்பதால், அவா் பாஜகவில் இணைந்திருப்பது சிலரை தூக்கமிழக்கச் செய்துள்ளது. அவரது வருகை தென்னிந்தியாவில் பாஜகவை வலுப்படுத்தும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT