இந்தியா

குஜராத்: சரத் பவாா் கட்சியின்ஒரே எம்எல்ஏ விலகல்

14th Nov 2022 11:57 PM

ADVERTISEMENT

 

குஜராத்தில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த ஒரே எம்எல்ஏவான காந்தல் ஜடேஜா கட்சியில் இருந்து விலகினாா். குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா்.

கடந்த 2012 மற்றும் 2017-ஆம் ஆண்டு தோ்தலில் போா்பந்தா் மாவட்டம் குடியானா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் சாா்பில் ஜடேஜா வெற்றி பெற்றாா். இந்த முறை அந்தத் தொகுதி கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த முறை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை. அப்போது பாஜக, காங்கிரஸ் என இரு முக்கிய கட்சி வேட்பாளா்களையும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளா் ஜடேஜா தோற்கடித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த முறை காங்கிரஸ் கூட்டணியில் தேசியவாத காங்கிரஸுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கட்சியில் இருந்து விலகிய அவா், தனது குடியானா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT