இந்தியா

கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையை ஆன்லைன் மூலமே மாற்றலாம் எளிதாக!

9th Nov 2022 01:24 PM

ADVERTISEMENT


பல்வேறு காரணங்களால் நாம் வசிக்கும் இடத்தையோ அல்லது அலுவலகத்தையோ மாற்ற நேரிடுகிறது. வேலை, கல்வி என பல்வேறு காரணங்களால் ஒருவர் இதனை மாற்றும் தேவை ஏற்படும். 

வாழ்விடம் மாறும்போது, வெறும் வீட்டை மாற்றுவது மட்டுமல்ல சிரமமான வேலை. அதனுடன் நமது வாக்காளர் அடையாள அட்டை முதல் எரிவாயு சிலிண்டருக்கான முகவரி வரை அனைத்தையும் மாற்றுவதுதான் மிகச் சிரமமான வேலையாக இருக்கும்.

இதையும் படிக்க.. விரைவில் பாடி - திருநின்றவூர் சாலை விரிவாக்கம்: திருப்பதி வரை விரிகிறது

இதையெல்லாம் கூட ஒருவர் மாற்றிவிடுவார். ஆனால், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையை மாற்றத்தான் வெகு நாள்கள் ஆகும்.

ADVERTISEMENT

ஒரு வங்கிக்குச் சென்று கிளையை மாற்ற படிவம் நிரப்பிக் கொடுத்து முகவரிக்கு அடையாளச் சான்றிதழ் கொண்டு ஒரு சில நாள்கள் வங்கிக்கு அலைந்து வங்கிக் கிளையை மாற்ற வேண்டும் என்று நினைத்தாலே பலரும் அப்படியே விட்டுவிடுவார்கள்.

ஆனால், இந்த வேலையை ஆன்லைன் மூலமாக செய்யும் வகையில் முதற்கட்டமாக எஸ்பிஐ மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிகள் வசதி செய்துள்ளன.

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் ஆன்லைன் மூலமே வங்கிக் கிளையை மாற்றிக் கொள்ளலாம்.
1. இதற்கு எஸ்பிஐ கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் www.onlinesbi.com இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்.
2. ஆன்லைன் வங்கிச் சேவையை திறக்க வேண்டும்.
3. அதில் இ-சேவைகள் (e-services) என்ற வாய்ப்பை கிளிக் செய்ய வேண்டும்.
4. குயிக் லிங்க்ஸ் கீழே இருக்கும் டிரான்ஸ்ஃபர் ஆஃப் சேவிங் அக்கவுண்ட் என்ற வாய்ப்பை தேர்வு செய்யவும்.
5. புதிய பக்கம் வரும். அதில் உங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கை தேர்வு செய்யுங்கள்.
6. நீங்கள் எந்த வங்கிக்கிளைக்கு மாற்ற விரும்புகிறீர்களோ அந்த வங்கிக் கிளையின் கோடு எண்ணைப் பதிவு செய்யவும்.
7. வங்கிக் கிளையின் கோடு தெரியவில்லை என்றால், கெட் பிராஞ்ச் கோடு என்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும். 
8. புதிய வங்கிக் கிளையின் பெயரை பதிவிட்டு, டேர்ம்ஸ் அன்ட் கண்டீஷனை அக்சப்ட் செய்து, சப்மிட் செய்யவும்.
9. செல்லிடப்பேசிக்கு ஓடிபி வரும். அதனை பதிவு செய்து சப்மிட் செய்யவும்.
10. ஒரு சில நாள்களில் உங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் கிளை மாற்றம் செய்யப்பட்டுவிடும்.

இதையும் படிக்க.. காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்


பஞ்சாப் நேஷனல் வங்கியில் வங்கிக் கிளையை மாற்றுவது எப்படி?
1. pnbindia.in என்ற வங்கியின் இணையதள முகவரிக்குச் சென்று லாக் இன் செய்யவும்.
2. இதர சேவைகளைத் தேர்வு செய்து, வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக் கிளையை மாற்ற சேஞ்ச் ஹோம் பிராஞ்ச் என்ற வாய்ப்பை அழுத்தில், அதில் சர்வீஸ் ரெக்வெஸ்ட் மற்றும் டிராக்கிங் என்பதை கிளிக் செய்யவும்.
3. அதில் உங்கள் வங்கிக் கணக்கைத் தேர்வு செய்து கன்டின்யூ என்பதை அழுத்தவும்.
4. மாற்ற விரும்பும் வங்கியின் ஐடியை தேர்வு செய்து, கன்டின்யூ என்பதை அழுத்தவும்.
5. ஓடிபியை பதிவிட்டு சப்மிட் செய்யவும்.
6. ஓரிது நாள்களில் உங்கள் வங்கிக் கணக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT